துபாய்: ஐபிஎல்2202 ஆண்டு நடைபெற உள்ள போட்டிகளில் மேலும் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. அந்த அணிகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 12 ஆயிரம் கோடிக்கு ஏலம் போயுள்ளதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் விளையாடி வரும் நிலையில், 2022ம் ஆண்டு முதல் 10 அணிகள் ஆடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்ங்கா நிறுவனம் ஒரு அணியையும், சிவிசி முதலீட்டு நிறுவனம்  ஒரு அணியையும் வாங்கியுள்ளன. இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் இனிமேல் 10 அணிகள் விளையாட உள்ளது. இதன் மூலம் போட்டிகளும் அதிகரித்துள்ளன.

2022ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்பதால், 74 போட்டிகள் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு அணிக்கும் 7 போட்டிகள் தங்கள் சார்ந்திருக்கும் நகரிலும் மற்ற 7 போட்டிகள் வெளிமாநிலத்திலும் நடக்கும் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.

இதைத் தொடர்ந்து, ஐபிஎல் 15வது சீசனில் பங்குபெறும்  அணி வீரர்களுக்கான  ஏலமும் விரைவில் நடைபெற உள்ளது.

இந்த இரு அணிகளையும் விற்பனை செய்வதன் மூலம் ரூ.10ஆயிரம் கோடி வரை ஈட்டலாம் என பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்தைவிட ஏலம் அமோகமாக நடைபெற்றது.  அகமதாபாத் அணியை  கோயங்காவின் ஆர்பி-எஸ்ஜி குழுமம் லக்னோ அணியை ரூ.7,090 கோடிக்கு விலைக்கு வாங்கியது.

லக்னோவை அடிப்படையாக வைத்து ஆர்பிஎஸ்ஜி (கோயங்கா) நிறுவனம் ரூ.7,090 கோடிக்கும்,  சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் (ஐரேலியா நிறுவனம்) அகமதாபாத் அணியை ரூ.5,625 கோடிக்கு வாங்கின. பிசிசிஐ நினைத்த தொகையைவிடகூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடிகிடைத்துள்ளது.

இந்த ஏலத்தில்  எம்எஸ் தோனியின் ஸ்போர்ட்ஸ் நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்றது. ஆனால், விதிமுறைகள் பிரச்சினை காரணமாக, தோனி நிறுவனம் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ அணியை வாங்கிய  கோயங்காவின் ஆர்பி-எஸ்ஜி குழுமத்தின் சொத்துமதிப்பு 600 கோடி டாலராகும், ஆண்டுக்கு 400 கோடி வருமானம்ஈட்டுகிறது. எரிசக்தி மின்சாரம், பிளாக் கார்பன் உற்பத்தி, சில்லரை வர்த்தகம், ஐடிசேவை, எஃப்எம்சிஜி , ஊகடம், பொழுதுபோக்கு, கட்டுமானத்துறை, கல்விதுறை போன்றபல்வேறு தொழில்களை நடத்துகிறது கோயங்கா குழுமம். கிரிக்கெட் தவிர கால்பந்துலீக் போட்டியில் முதலில் ஏடிகேஅணியை வாங்கியது ஆர்பி-எஸ்ஜி குழுமம், தற்போது, ஏடிகே-மோகுன் போகன் அணியை நடத்தி வருகிறது.