ம்பம்

கேரள நடிகர் பிர்த்விராஜ் பெரியாறு அணை குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு இட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா மற்றும் தமிழகத்துக்கு இடையே தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது.  கடந்த 23 ஆம் தேதி மாலை அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தது.   இதையடுத்து அணை கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்த அணையின் பலம் குறித்து இரு மாநில மகக்ளிடையே சர்ச்சையை உண்டாக்கும் கருத்துக்களைக் கேரள மாநிலத்தவர் பகிர்ந்து வருகின்றனர்.

 

பிரபல கேரள நடிகர் பிருத்விராஜ்,

உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும், 125 ஆண்டு பழமையான அணை இன்னும் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டுச் சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது. ‘‘Decommission Mullaperiyaar Dam(முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும்)’’

என பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவு தமிழகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.   தமிழக விவசாயிகள் தரப்பில்,

”கடந்த 2011இல் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மிகப்பெரும் பிரச்சினை ஏற்பட்ட போது கூட கேரள நடிகர்கள் யாரும் இதுகுறித்து பேசவில்லை.  பெரும்பாலான கேரள நடிகர்கள் தங்கள் முகவரி சென்னைதான் என்னும்   அளவிற்குத் தமிழகத்தோடு ஒன்றிப் போனவர்கள் ஆவார்கள்.

மொழி என வந்தால், தமிழுக்கும், மலையாளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தற்போது கேரள திரையுலகத்தை சேர்ந்த நடிகர் பிருத்விராஜ் பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.எந்த ஒரு கலைஞனுக்கும் மொழி, இனம், நாடு என்ற எல்லை கிடையாது. அவர்கள் பொதுமக்களை மகிழ்வித்து சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பொதுவானவர்கள்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, கேரள திரைத்துறையின் கவனம் பெரியாறு அணைப் பக்கம் திரும்பி இருப்பது வருத்தத்திற்குரியது.  இரு மாநில மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய ஒரு கலைஞன், மக்களைப் பிரிப்பது  வேதனைக்குரியது.. நடிகர் பிருத்விராஜ் இதை உணர்ந்து தனது கருத்துக்காகத் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.