இரண்டு மாதங்களுக்குப் பிறகு கருணாநிதி படம் வெளியீடு!

Must read

kaliganar
திமுக தலைவர் கருணாநிதியின் மறுபெயர் சுறுசுறுப்பு.
அதிகாலை முதல் நள்ளிரவு வரை, தனக்கான பணிகளை ஒதுக்கிக்கொண்டு சுறுசுறுப்பாக பணியாற்றுபவர்.
முதல்வராக இருந்தபோதே, கட்சிப் பணிகளோடு, திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதும் அளவுக்கு ஓய்வின்றி உழைத்தவர், உழைப்பவர், இந்த 92 வயது இளைஞர்.
சுறுசுறுப்புக்கு பெயர் போனவர். ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் என்று அவரது தொண்டர்கள் பெருமையாக குறிப்பிடுவர்.
அந்த அளவுக்கு கட்சிப்பணி இலக்கியப்பணியில் பம்பரமாக சுழன்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் தலைவர்.
தலைவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜோதி பாசு , ஈஎம்.எஸ். நம்பூத்ரி பாடு ஆகியோர் ஓய்வறியா உழைப்பாளிகள் என பெயரெடுத்தவர்கள், அதே அளவுக்கு ஓய்வறியா உழைப்பாளியாக 92 வயதிலும் செயல்பட்டு வருபவர் கருணாநிதி.
இந்நிலையில் மாத்திரை சாப்பிட்டதில் ஒவ்வாமை ஏற்பட… பெட் ரெஸ்டில் இருக்கச் சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.
ஆகவே வீட்டை விட்டு வெளி நிகழ்ச்சிகள் எதற்கும் வரவில்லை கருணாநிதி. அவரது புகைப்படங்கள் எதுவும்கூட வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் இன்று,  தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி தனது படத்தை வெளியிட்டுள்ளார். அவரை பேராசிரியர் அன்பழகன் விசாரித்தபோது எடுத்தபடம். அருகில் முக ஸ்டாலின் நிற்கிறார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article