நீதிபதிகளை தொடர்ந்து தேர்தல் ஆணையர்களுக்கும் அதிரடி சம்பள உயர்வு?

Must read

டில்லி,

ச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக தலைமை தேர்தல் ஆணையர்களின் ஊதியமும் இரு மடங்காக உயர்த்த இருப்பதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகளின்  சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்பபட்டது.

அதுபோல தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர்களின் சம்பளம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவர்களின் சம்பளமும் இரட்டிப்பாக உயர இருப்பதாகவும், அதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

More articles

Latest article