டில்லி

த்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார்.

கடந்த திங்கள் அன்று இரவு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திடிர் உடல்நகக் குறைவால் பாதிக்கப்பட்டார். உடனடியாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நுரையிரல் சம்பந்தமான சிகிச்சை பிரிவில் உள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடந்த மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதை ஒட்டி அவருடைய நிதி அமைச்சகத்தை பியூஷ் கோயல் நிர்வகித்து வந்தார். தற்போது அறுவை சிகிச்சைக்கு பின் நடக்க வேண்டிய பரிசோதனைக்காக அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றுள்ளார்.

தற்போது பாஜகவின் கடைசி நிதிநிலை அறிக்கை தயாரிப்பு நிலையில் உள்ளது. இந்த முறை பாஜக தோல்வி அடைந்தால் இது இடைக்கால நிதிநிலை அறிக்கையாக இருக்கும். பாஜக வெற்றி அடைந்தால் இந்த நிதிநிலை அறிக்கை தொடரும். எனவே இந்த நிதிநிலை அறிக்கையை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தேர்தலுக்கு முந்தைய நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் போது நிதி அமைச்சர் சிகிச்சைக்காக சென்றுள்ளது பல அரசியல் சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. ஆனால் அரசு தரப்பில் நிதி நிலை அறிக்கை தயாரிப்பு அமைச்சரின் சிகிச்சையினால் பாதிப்பு அடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.