மும்பை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி கட்சிகளான  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளியே தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை ஒழித்துக்கட்டும் நோக்கில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளிடையே காங்கிரஸ் கட்சி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.  48 தொகுதிகளில் 45 தொகுதிகளுக்கான  தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிட்ம் பேசிய சரத் பவார்,  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே மகாராஷ்டிராவிலுள்ள 48 தொகுதிகளில் 45 தொகுதிகளுக்கான பங்கீடு முடிந்துவிட்டது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியிகளிலிருந்து ஒரு தொகுதியை ஸ்வாபிமாணி ஷெட்காரி சங்காடனா கட்சிக்கு ஒதுக்கவுள்ளோம். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ஒதுக்கீடு நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைக்க வில்லை என்று தெளிவுபடுத்திய பவார், தனது  சொந்த விவகாரம் தொடர்பாகலே ராஜ் தாக்கரே தன்னை சந்தித்ததாக கூறினார்.  அரசியல்வாதிகள் கூட்டணிக்காக மட்டும் சந்திப்பது கிடையாது. அவரது மகனுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அதுதொடர்பாக அவர் என்னை சந்தித்தார் என்று சரத் பவார் தெரிவித்தார்.