திருவனந்தபுரம்

கேரள மாநில அரசு 28 சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து செய்துள்ளது.

மத்திய அரசு பல தனியார் நிறுவனங்களுக்கு சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்க அனுமதி அளித்திருந்தது. அந்த நிறுவனங்கள் அந்த சாலைகள் மற்றும் பாலங்களில் சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்க உரிமையும் அளித்தது. நிறுவனங்கள் செலவு செய்த தொகையை திரும்பப் பெற இந்த சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் உரிமையை அரசு அந்த நிறுவனங்களுக்கு அளித்தது.

இந்த கட்டண வசூலிப்பு முறை அரசு குறிப்பிட்டுள்ள காலகட்டத்துக்கு பிறகும் தொடர்ந்து வருவதால் பல வாகன ஓட்டிகளும் உரிமையாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த சுங்கக் கட்டணம் தனியார் மட்டுமின்றி அந்தந்த மாநில பொதுப் பணித்துறையும் வசூலித்து வந்தன. இந்த அரசின் கட்டண வசூலும் தொடர்ந்து வந்தன.

கேரள அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் ஒரு பொது நிகழ்வில், “கட்டுமானத்துக்கு செலவழித்த தொகைக்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது செலவழித்த தொகை வந்து விட்டதால் அரசு சாலைகள் மற்றும் பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள 28 சுங்கச் சாவடிக் கட்டணங்களை உடனடியாக ரத்து செய்கிறது. இனி 10 சுங்கச் சாவடிகள் மட்டுமே கட்டணம் வசூலிக்கும்.” என தெரிவித்தார்.