மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் பக்கம் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டது.

எதற்காக முடக்கப்பட்டது என்ற விவரம் தெரியாததால் டிவிட்டர் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.

ஏ.ஆர். ரஹ்மான் பாடலின் காப்புரிமை குறித்து சோனி மியூசிக் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் அந்த பாடலை பயன்படுத்தியதற்காக முடக்கப்பட்டது தெரியவந்தது.

2017 ம் ஆண்டு ரவிசங்கர் பிரசாத் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற “மா துஜே சலாம்” என்ற பாடலை இணைத்திருந்தார் இதனை சோனி நிறுவனத்தின் அனுமதியில்லாமல் வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது டிவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையின்படி சமூக வலைதள பதிவுகள் குறித்த ஆட்சேபனையை பயனாளருக்குத் தெரிவித்த பின்னரே முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய அரசின் விதிகளை ஏற்றுக்கொள்வதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்த டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசின் விதியை மீறி செயல்பட்டது இதன் மூலம் தெரியவந்திருக்கிறது.

இதற்காக வருத்தம் தெரிவித்த டிவிட்டர் நிறுவனம் சர்ச்சைக்குறிய அந்த 2017 ம் ஆண்டு பதிவை மட்டும் நீக்கி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் கணக்கை ஒரு மணிநேரத்தில் மீண்டும் அனுமதி அளித்தது.