ரயிலில் சொந்த ஊருக்கு பயணித்த ஜனாதிபதி

Must read

புதுடெல்லி:
னாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்திரபிரதேசத்தில்  உள்ள தனது சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம், பரன்க் என்ற கிராமத்தில் பிறந்தவர். இந்நிலையில் பிறந்த ஊரை காணவும், தன் பள்ளி தோழர்கள், உறவினர்கள் ஆகியோரை சந்திக்கவும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவி சுனிதா தேவியுடன் டில்லி சப்தர்ஜங் ரயில்நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் சென்று அங்கிருந்து பரன்க் கிராமத்திற்கு சென்றார்.

ஜனாதிபதியை ரயில் அமைச்சர் பியூஷ் கோயல், ரயில் வாரிய தலைவர் சுனித் ஷர்மா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

இது போன்று கடந்த 2006 ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், சிறப்பு ரயில் மூலம் டில்லியிலிருந்து டேராடூனுக்கு பயணித்தார். அதன் பின்னர் 15 ஆண்டுகளுக்குபின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரயில் மூலம் தனது சொந்த கிராமத்திற்கு பயணம் செய்துள்ளார்.

More articles

Latest article