டெல்லி: தலைநகர் எல்லையில் நடைபெற்று விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகள் சமூக வலைதளங்களில் பதியப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரபல நடிகை கங்கனா ரனாவுத்தின சர்ச்சைக்குரியை டிவிட்டை கிரிகெட் நிர்வாகம் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை விமர்சித்து நடிகை கங்கனா ரனாவத் அடிக்கடி டிவிட் பதிவிட்டு வருகிறார். அதுபோல விவசாயி களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களையும் விமர்சித்து வருகிறார்.

இந்த நடிகை பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில்,  “நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது காலத்தின் தேவை. இந்தியா எப்போதும் வலுவாக உள்ளது. நமது நாட்டின் நல்வாழ்வில் நமது விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர், மேலும் ஒரு தீர்வைக் காண அனைவரும் தங்கள் பாத்திரங்களை வகிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்  என கூறியிருந்தார்.

இதை  மேற்கோள்காட்டி கங்கனா ரிவிட் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில்,   “இந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஏன் தோபி கா குட்டா நா கர் கா நா காட் கா என்று ஒலிக்கிறார்கள்? விவசாயிகள் தங்கள் நலனுக்காக புரட்சிகர சட்டங்களுக்கு எதிராக ஏன் இருப்பார்கள். இவர்கள் பயங்கரவாதிகள். அந்த நா … இட்னா தார் லக்தா ஹை? ” என தெரிவித்திருந்தார்.  இது சர்ச்சையானது.‘

முன்னதாக, கங்கனா இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கியதற்காக பாப் நட்சத்திரம் ரிஹானாவை “முட்டாள்”, “போலி”, “ஆபாச பாடகர்” மற்றும் “ஆபாச நட்சத்திரம்” என்று அழைத்தார். அதுபோல, விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் வெளிநாட்டு பிரபலங்களையும் கங்கான விமர்சித்து டிவிட் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக முன்னாள் ஷிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் மஞ்சித் சிங் ஜி.கே சமூக ட்விட்டருக்கு சட்ட அறிவிப்பை அனுப்பியுள்ளார். விவசாயிகளுக்கு எதிரான அவதூறு அறிக்கைகளை ட்வீட் செய்ததற்காக ரனவுத்தின் கணக்கை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நடிகையின் பதிவுகள் உண்மையில் தவறானவை என்றும், விவசாயிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தினதும் உருவம், நற்பெயர் மற்றும் நல்லெண்ணத்தை இழிவுபடுத்துவதாகவோ அல்லது களங்கப்படுத்துவதாகவோ சட்டப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் அறிவிப்புக்கு இணங்கத் தவறினால், அது அதன் ஆபத்து மற்றும் விளைவுகளில் மட்டுமே இருக்கும் என்றும், அனைத்து சட்டரீதியான தீர்வுகளையும் பெற சிங்கிற்கு உரிமை உண்டு என்றும்  எச்சரிக்கப்பட்டது.

இதையடுத்து,  நடிகை கங்கனா ரானவுத்தின் பதிவுகள் “இது ட்விட்டர் விதிகளை மீறியுள்ளது” என்று கூறி கங்கனாவின் டிவீட்டை டிவிட்டர் நிறுவனம் நீக்கி நடவடிககை எடுத்துள்ளது.