சென்னை:

டைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்தவர்களை தடுத்த திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

படுகாயம் அடைந்த, திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பார்த்தசாரதி மற்றும் ஷேக் முகமது ஆகியோர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொருக்குப்பேட்டை நேதாஜி நகரில் வீடு வீடாக சென்று ஓட்டுக்கு ரூ.4000 வீதம், தினகரன் தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து  அந்த பகுதிக்கு திமுகவினர் சென்றனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் திமுகவினரை உருட்டுக்கட்டையாலும், அரிவாளை கொண்டு வெட்டியதில் ஷேக் முகமத், பார்த்தசாரதி ஆகியோரின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இருவரும் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் போது சாலையில் நின்றுகொண்டிருந்த நேதாஜி நகர் பகுதிவாசி அப்பாஸ் என்பவரும் உருட்டுக்கட்டை அடி விழுந்தது. இதன் காரணமாக அவரும் படுகாயமடைந்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் காரணமாக  அரிவாள் வெட்டு வரை பிரச்சினை சென்றுள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள்  வெளியூரில் இருந்து இறக்கப்பட்ட குண்டர்கள் என தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.