தினமலர் செய்தியாளரைத் தாக்கிய டி.டி.வி. தினகரன்  ஆட்கள்

Must read

சுந்தர்

தஞ்சை:

தினமலர் நாளிதழின் புகைப்பட செய்தியாளரை, டி.டிவி. தினகரன் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி கூறப்படுவதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று தஞ்சை திலகர் திடலில் டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதம் இருக்கிறார். இதில் அவரது ஆதரவாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டிருக்கிறார்கள்.

தாக்கப்பட்ட நிலையில்…

இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டவர்கள் பலர், அருகில் இருக்கும் தேநீர் கடைகள், சிறு உணவங்கள் ஆகியவற்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சற்று தள்ளியிருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளிலும் சிலர் சென்று வந்தவந்தபடி இருந்தார்கள். தவிர, அருகில் இருக்கும் அம்மா உணவகத்தில் சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

இதை தினமலர் (சென்னை) புகைப்படச் செய்தியாளர் சுந்தர் படம் பிடிக்க முயன்றார். அதை பார்த்துவிட்ட தினகரன் ஆதரவாளரம், மற்ற தன் கூட்டாளிகளிடம் கூற, அனைவரும் சேர்ந்து சுந்தரை கடுமையாக தாக்கினர்.

இதில் சுந்தரின் முகம், கழுத்து, மற்றும் தோள்பட்டை பகுதியில் கடும் காயம் ஏற்பட்டது.

இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க தஞ்சை பத்திரிகையாளர்கள் திரண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article