ஸ்டெர்லைட் ஆலை  அதிபர் வீட்டு முன்  லண்டன் தமிழர்கள் போராட்டம்! 

Must read


தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டுமுன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

வேதாந்தா நிறுவனத்தின் ஒரு அங்கமாக தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலை செயல்படுகிறது. ஆரம்பம் முதலே, ஆலையிலிருந்து வெளியாகும் விஷப் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு மக்களுக்குச் சிறிய உடல் பாதிப்பு முதல் புற்றுநோய் தாக்கும் அபாயம் வரை பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். அந்த ஆலையை மூடக்கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

 

இந்த நிலையில் நேற்று ஆலையை மூடக்கோரி பொதுக்கூட்டம் நடந்தது. மாநாட்டுக்கு வந்த தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற மக்கள், பேரணி போல் திரண்டு வந்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் லண்டனில் உள்ள தமிழர்கள் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் அனில் அகார்வாலின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதோடு, அது குறித்த கருத்துகளை அடங்கிய பதாகைகளை உயர்த்தியபடி இந்தப்போராட்டம் நடத்தப்பட்டது.

, பொதுமக்களுக்குப் பேராபத்தை விளைவிக்கும் ஆலையை மூடச் சொல்லி கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

 

More articles

Latest article