சென்னை:

ன்று அதிகாலை முதல் சசிகலா குடும்ப உறவினர்கள், ஜெயா டிவி அலுவலகம் மற்றும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள், அவர்களின் வழக்கறிஞர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சோதனை குறித்து பலவாறாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

வருமான வரி சோதனை ஏன் நடைபெறுகிறது என்பது குறித்து வருமான வரித்துறையும் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், தினகரன் தரப்பு வழக்கறிஞர் காசிநாதபாரதி, வருமான வரித்துறையின் ரெய்டு குறித்து கூறியதாவது,

`வருமான வரித்துறை என்ற அமைப்பு  சுதந்திரமான  அமைப்பு என நினைத்தோம். ஆனால், அது மோடியின் இன்னொரு அரசியல் பிரிவு என்பது இந்த ரெய்டு வாயிலாக தெளிவாகியுள்ளது’ என்று குற்றம் சாட்டினார்.

மேலும், வருமான வரி ஏய்ப்பிருந்தால், முறையாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டி ருக்கலாம். இப்படி சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் வருமான வரித்துறை அப்படிச் செய்யவில்லை.

அரசு துறையான  வருமான வரித்துறை என்பது சுந்திரமாகச் செயல்படும் அமைப்பு என்று நினைதிருந்தோம். ஆனால், இது மோடியின் இன்னொரு அரசியல் பிரிவுதான் என்பது இந்த சோதனைகளிலிருந்து தெளிவாகிறது.

சேகர் ரெட்டி வீட்டிலும் ஜனார்த்தனன் வீட்டிலும் ஐ.டி ரெய்டு நடத்தப்படாத நிலையில், இங்கு மட்டும் ரெய்டு நடத்துவதற்கான அவசியம் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், முன்னாள் தலைமை செயலாளர் . ராமமோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையில் கண்டுபிடித்தது என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

வருமான வரித்துறையினரின்  இதுபோன்ற சோதனைகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். எதையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம்.

ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைகள் என்பது அ.தி.மு.க சார்புடைய நிறுவனங்கள். சோதகைள் என்ற பெயரில் அதை கைப்பற்ற முடியாது  என்றும் அவர் கூறினார்.