திருச்சி,
சிகலா உறவினர் வீடுகளில் நடந்து வரும் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை முதல் சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடு, அலுவலகங்கள், ஜெயா டிவி அலுவலகம் உள்பட 150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறையினரின் சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது

உட்கட்சிப் பூசலை தீவிரப்படுத்தும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளன   உட்கட்சி பூசலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அ.தி.மு.க.வின் ஒரு தரப்பை சேர்ந்த சசிகலா -தினகரன் உறவினர்கள் வீடுகள், ஜெயா டி.வி. அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வருமான வரித்துறை ஒரு அதிகாரம் உள்ள அமைப்பு. வரி ஏய்ப்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் தங்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் வருமான வரித்துறை பயன்படுத்துவது அந்த துறையை சீர் குலைப்பதாகும்.

எனவே தற்போதைய நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதனை பா.ஜ.க. கைவிடுவது நல்லது. மக்களை திசை திருப்ப, ஆட்சி அதிகாரத்தின் தோல்வியை மறைக்க மத்திய அரசு இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.