சின்னத்தம்பி யானையை காட்டுக்குள் அனுப்ப முயற்சியுங்கள்: வனத்துறையினருக்கு உயர்நீதி மன்றம் அறிவுரை

சென்னை:

சின்னத்தம்பி காட்டு யானையை ஏன் மீண்டும் காட்டுக்குள் அனுப்பக்கூடாது என்று கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம், அதை  காட்டுக்குள் அனுப்ப முயற்சி யுங்கள் என்று தமிழக வனத்துறையினருக்கு உயர்நீதி மன்றம் அறிவுரை கூறி உள்ளது.

கோவை மாவட்டம் உடுமலை அருகே முகாமிட்டிருந்த சின்னத்தம்பி காட்டு யானை, கும்கி யானையை பார்த்து பயம் கொள்ளாமல், கும்கியை நண்பனாக்கி வனத்துறையினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது மீண்டும் திருப்பூர் மாவட்டத்திற்கு திரும்பி வந்து கண்ணாடிப்புத்தூர் பகுதியில் கரும்பு காட்டில் முகாமிட்டுள்ளது.

யானை கரும்புத் தோட்டம் பகுதிக்கு வந்ததை தொடர்ந்து, கரும்பு பயிர்கள் சேதம் சேதமடைந்ததாகவும், யானையை அப்புறப்படுத்த கோரியும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மீண்டும் கும்கி யானைகளை கொண்டு சின்னத்தம்பியை காட்டுக் குள் விரட்டும் முயற்சி தோல்வி அடைந்தது. இறுதியாக சுயம்பு என்ற கும்கி யானையை வனத்துறையினர் வரழைத்து உள்ளனர். சின்னத்தம்பியை விரட்ட முடியவில்லை என்றால்,  மயங்க ஊசி செலுத்தி பிடித்து முகாமில் அடைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்பக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது

மேலும், சின்னதம்பியின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chiennathampi elephant, forest department, High Court Advisory, Try to send the into the forest:, கும்கி யானை, சின்னத்தம்பி, சின்னத்தம்பி பாதுகாப்பு குழு, சுயம்பு கும்கி யானை, தமிழக அரசு, வனத்துறை
-=-