சென்னை:
யுனெஸ்கோ அங்கீகார பட்டியலில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இடம் பெற்றுள்ளதாக மத்திய கலாசார அமைச்சம் தெரிவித்துள்ளது.

சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகன்நாத், இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் 25 இடங்களை பட்டியலிட்டார். அவற்றுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற வேண்டுமென மத்திய கலாசார அமைச்சகத்திற்கு ஆய்வு முடிவுகளை அனுப்பி வைத்திருந்தார்.

இவருக்கு மத்திய அமைச்சகம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில், அமிர்தசரஸ் கோவில் இரண்டும், ஏற்கனவே யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.