சென்னை:
த்திய அரசின் கூடுதல் இலவச அரிசி வினியோகம் இன்று துவங்க உள்ளது.

கொரோனா இரண்டாம் பரவலை தடுக்க, 2021ல் ஊரடங்கு அமலானது. இந்நிலையில், மத்திய அரசு, ‘கரீப் கல்யாண்’ திட்டத்தின் கீழ், அந்த ஆண்டு மே, ஜூனில் முன்னுரிமை, அந்தியோதயா கார்டுகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் கூடுதலாக தலா ஐந்து கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்க, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இதற்காக, தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து, 1.65 லட்சம் டன் முதல் 1.80 லட்சம் டன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. பின், மத்திய அரசு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை, இந்தாண்டு மார்ச் வரை நீட்டித்தது.

தற்போது, இத்திட்டத்தை வரும் செப்டம்பர்  வரை நீட்டித்துள்ளது. தமிழகத்தில் உள்ள, 93 லட்சம் முன்னுரிமை, 18 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி வினியோகம் ரேஷன் கடைகளில் இன்று துவங்குகிறது.