சென்னை:
ன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 108 ரூபாய் 21 காசுகளுக்கு விற்பனையாகிறது.

பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 108 ரூபாய் 21 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 21 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 12 நாட்களில் 10-வது முறையாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி,கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 81 காசுகள் ஆகவும் ,டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 85 காசுகள் ஆகவும் அதிகரித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.