திருச்சி: திருச்சியில் உள்ள மத்தியஅரசு தொழிற்கல்வி நிறுவனமான  என்ஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி என்ஐடியில் படித்து வரும் ஆந்திர மாணவி ஒருவர், என்ஐடி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், தற்கொலை செய்துகொண்ட மாணவி பெயர், சௌமியா (வயது 22) என்பதும்,  என்ஐடி கல்லூரியில், பிடெக் சிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர்,  ஆந்திர மாநிலம் காக்கிநாடா பான்குடியைச் சேர்ந்தவர் என்றும்,  தடகள வீராங்கனையான இவருடன் திருவாரூரைச் சேர்ந்த தீட்சனா என்ற மாணவியுடன் தங்கி கல்வி பயின்று வருகிறார். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து சக மாணவிகளிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.