வறுமை: மனைவியின் உடலை குப்பைகளை கொண்டு எரித்த கணவன்!

Must read

போபால்:
றந்துபோன தனது மனைவியின் உடலை சுடுகாட்டில் எரிக்க பணம் இல்லாததால், குப்பைகளைக் கொண்டு எரித்திருக்கிறார் ஒரு இந்திய கணவர்.

ஜகதீஸ் பில்
ஜகதீஸ் பில்

இந்த சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. இம் மாநிலத்தின் தலைநகரான போலால் அருகே உள்ள நீமுச் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜகதீஸ் பில். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.  இவரது மனைவி நோஜி பாய் உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
பொது இடத்தில் மனைவியின் உடலை எரிக்கிறார்
பொது இடத்தில் மனைவியின் உடலை எரிக்கிறார்

இந்த நிலையில் ஜகதீஸ் பில், தனது மனைவியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றார். சுடுகாட்டு நிர்வாகிகள் அவரிடம்  உடலை எரிக்க 2,500 ரூபாய் பணம் கேட்டிருக்கிறார்கள்.  தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று ஜகதீஸ் பில் தெரிவித்திருக்கிறார்.
“அப்படியானால் இங்கு உடலை எரிக்க முடியாது” என்று சுடுகாட்டு நிர்வாகிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் பொது இடத்தில் வைத்து 3 மணிநேரமாக குப்பைகளை சேர்த்து தனது மனைவியின் உடலை எரித்துள்ளார் ஜகதீஸ் பில்.
பிணத்தை எரித்த சாம்பல்..
பிணத்தை எரித்த சாம்பல்..

உத்திரபிரதேசத்தில் இறந்த தனது குழந்தையை எடுத்துச் செல்ல பணம் இல்லாத காரணத்தினால் மருத்துவமனை வாயிலில் ஒரு பெண் காத்திருந்தது…  ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை பணம் இல்லாத காரணத்தினால் கணவர் தோளிலேயே பல கி.மீ. தூக்கிச் சென்றது போன்ற சம்பவங்கள் நாட்டையே அதிரச் செய்தன. தற்போது பொது இடத்தில் குப்பைகளைக் கொண்டு மனைவியின் பிணத்தை ஜகதீஸ் பில் எரித்த சம்பவமும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

More articles

Latest article