காவிரி பிரச்சினை: நாளை முக்கிய முடிவு! கர்நாடக முதல்வர் அறிவிப்பு!!

Must read

 
பெங்களுரு:
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறிய நிலையில் கர்நாடக முதல்வர் நாளை  முக்கிய அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கூட்டத்திற்கு  ஏற்பாடு செய்துள்ளார். அப்போது முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
இதற்கிடையில் உச்சநீதி மன்ற தீர்ப்பையடுத்து, கர்நாடகாவில்  நாளை பந்த் நடத்த மாண்டியா மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
k-cm
இதுகுறித்து கர்நாடக முதல்வர்  சித்தராமையா கூறியதாவது:
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. தீர்ப்பின் நகல் நாளை கிடைக்கும். அதன்பிறகே முடிவு எடுக்க முடியும். மேலும்  நாளை மதியம் 3 மணி அளவில் கர்நாடக சட்டமன்ற தலைவர்கள், எதிர்கட்சி தலைவர், மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
நாளை மாண்டியாவில் விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,  சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு அவர்  கூறினார்.

More articles

Latest article