டெல்லி:

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ்/மெயில் ரெயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்தவர்கள் அதே வழித்தடத்தில் செல்லும் ராஜ்தானி, சதாப்தி ரெயில்களில் பயணம் செய்யலாம் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே அறிவித்துள்ளது.

டிக்கெட் முன்பதிவின் போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மாற்று ஏற்பாடாக அடுத்து வரும் ரெயில்களில் பயணம் செய்யும் வசதியை தேர்வு செய்திருந்தால் இந்த புதிய திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

இதற்காக பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்வதோ திரும்ப வழங்குவதோ முடியாது. முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி, தூரந்தோ போன்ற பிரீமியர் ரெயில்கள் மற்றும் சுவிதா போன்ற சிறப்பு ரெயில்களில் உள்ள காலி படுக்கை வசதிகளை நிரப்பிக் கொள்ளும் வகையில் இந்த மாற்று ஏற்பாடு திட்டம் கொண்டு வரப்படுகிறது.

பல காரணங்களால் மேற்கொள்ளப்படும் டிக்கெட் ரத்து காரணமாக ஆண்டுதோறும் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் திருப்பி கொடுத்து வருகிறது. பயணிகள் வசதிக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மாற்று ரெயில்களில் பயணம் செய்யும் திட்டம் கொண்டு வரப்படுகிறது என ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ‘‘இதன் மூலம் இரு நோக்கங்கள் நிறைவேறும். காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கை கொடுத்தலும், காலியாக உள்ள இதர ரெயில் இரு க்கைகளை பயன்படுத்துவதும் நிறைவேறும்’’ என்றார் அவர்.

‘‘பிரீமியர் ரெயில்களில் தேவைக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் மாறும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு இதில் சில ப டுக்கைகள் காலியாக செல்லும் சூழல் உருவாகிறது. அதே சமயம் பல பயணிகளுக்கு மெயில்/எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிக தேவை காரணமாக இடம் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.

எப்படி இருந்தாலும் படுக்கைகள் காலியாக தான பயணிக்கவுள்ளது. எந்த அளவுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இரு க்கிறோமோ அந்த அளவுக்கு ரெயில்வேக்கு அது சேமிப்பு தான். இதற்கு கூடுதல் செலவு ஏற்பட போவது கிடையாது. இது ரெயில்வேக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தும்’’ என்றார்.

மாற்று ரெயில்களை தேர்வு செய்யும் இந்த திட்டம் தற்போது டெல்லி-லக்னோ, டெல்லி-ஜம்மு, டெல்லி-மும்பை உள்ளிட்ட 6 வழித்தடங்களில் பரீட்சாத்திர முறையில் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஆன்லைன் புக்கிங் முறைக்கு மட்டுமே தற்போது அமலில் உள்ளது. டிக்கெட் கவுன்டரில் புக் செய்யும் டிக்கெட்களுக்கும் இந்த வசதியை ஏற்ப டுத்தும் வகையில் சாப்ட்வேர் விரைவில் நிறுவப்படவுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் உள்ள காத்திருப்போர் பட்டியலில் இந்த பயணிகளின் பெயர் இடம்பெறாது. மாற்று ரெயில் திட்ட பயணிகளின் பட்டியல் பிரத்யேகமாக ஒட்டப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.