சென்னை

உயர்நீதிமன்றத்தில்  அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஒப்புக் கொண்டு பணிக்கு திரும்ப தொழிற்சங்கங்கள் முன்வந்துள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்தது.   ஆனால் ஊழியர்கள் 2.57 மடங்கு ஊதியம் தேவை எனக் கூறி வேலை நிறுத்தம் செய்தனர்.   இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சில நிமிடங்களுக்கு முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ள தொ மு ச மற்றும் சி ஐ டி யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கங்கள் 2.44 மடங்கு ஊதிய உயர்வை ஒப்புக் கொண்டு வேலைக்கு திரும்ப த்யார் என கூறி உள்ளனர்.  அத்துடன்  இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.

விரைவில் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க அரசு பேச்சு வார்த்தை நடத்தி ஒப்புக் கொள்ள வேண்டும் என்னும் நிபந்தனையுடன் வேலைக்கு திரும்ப  ஒப்புக் கொண்டுள்ளனர்.   மேலும் பொங்கல் நெருங்கி வருவதால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க இந்த முடிவு எடுத்துள்ளதாக  தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஒட்டி 7 நாள் தொடர்ந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.