ன்னை

சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் கோட்டங்களில் திருவனந்தபுரம் கோட்டம் தென்னக  ரெயில்வேக்கு உட்பட்டதாகும். இங்குள்ள ஆலுவா-கலமசேரி இடையே உள்ள ரயில் பாலத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

இதையொட்டி அந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதனால், சென்னையில் இருந்து குருவாயூர் வரை இயக்கப்படும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதனால் வருகிற 11 ஆம் தேதி மற்றும் 25- ஆம் தேதிகளில் எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரயில் எர்ணாகுளம்-குருவாயூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.