சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் ரெயில் சேவைகள் மாற்றம்

Must read

சென்னை

சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

நாளை அதாவது 28 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சென்னை மற்றும் கூடூர் இடையே பரமார்ப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சென்னை மற்றும் கும்மிடிபூண்டி இடையே ரெயில் சேவைகளில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரெயில்வே ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் காணப்படுவதாவது :

“நாளை (28ம் ேததி) சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை, 8.15 மணிக்கு சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

அத்துடன் காலை 9 மணிக்கு புறப்படும் ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். தொடர்ந்து 9.30 மற்றும் 10.25 மணிக்கு புறப்படும் ரயில்கள் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதை போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.50 மணிக்கு சென்ட்ரலுக்கு வழக்கமாக புறப்படும் ரயில் நாளை எண்ணூரில் இருந்து புறப்படும்.

மற்றும் சூலூர்பேட்டையில் இருந்து காலை, 10 மணிக்கு சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும். அதை போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை, 10.50 மற்றும் 11.20 மணிக்கு சென்ட்ரலுக்கு வழக்கமாக புறப்படும் ரயில், நாளை எண்ணூரில் இருந்து புறப்படும்.”

அந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article