டில்லி:

வடகிழக்கு மாநிலங்களில் கடும் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சாலை, ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் பாதைகளில் பல இடங்களில் பாலங்களும், ரெயில் தண்டவாளங்களும் வெள்ளத்தால் பலத்த சேதமடைந்துள்ளது.

இதை சீர் செய்யும் பணியில் வடகிழக்கு பிரான்டியர் ரெயில்வே ஈடுபட்டுள்ளது. எனினும் வரும் 28ம் தேதி க்கு முன்னதாக ரெயில் போக்குவரத்து சீராகாது என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘‘பிகார் மாநிலத்தில் கிஷன்கஞ், கத்திஹர், அராரியா மாவட்டங்களில் ரெயில் பாதைகள் பலத்த சேதமடை ந்துள்ளது. இதனால் பயணிகள் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் பாதித்துள்ளது. சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று ரெயில்வே செய்தி தொடர்பாளர் சர்மா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த செய்திகுறிப்பில்,‘‘ பொறியியல் துறை மதிப்பீட்டின் படி அனைத்து ரெயில் தொடர்புகளும் வரும் 28ம் தேதிக்கு முன்பு சீரடைய வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பயணிகள் வந்து செல்லவும், சரக்கு போக்குவரத்தை கையாளவும் மாற்று நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘இதன்படி தல்கோலா-கவுகாத்தி மற்றும் கவுகாத்தி-திப்ருகார்க் இடையே இயக்கப்படும் தினசரி இயக்கப்ப டும் ரெயில்களோடு கூடுதலாக தல்கோலா மற்றும் திப்ருகார்கிற்கு நேரடி சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

கதிஹார் மற்றும் மால்டா இடையில் துண்டிக்கப்பட்ட 3ம் நம்பர் பாலம் சீரமைப்பு பணிகள் முடி ந்துவிட்டதால் இன்று முதல் ராய்கஞ்ச் பகுதிக்கும் ரெயில் போக்குவரத்து தொடங்கும். சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் கதிஹாரில் இருந்து ராய்கஞ் வரை நீட்டிக்கப்படும்.

தால்கோலா மற்றும் ராய்கஞ்ச் இடையிலான ரெயில் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் நான்கு வழி ச்சாலைக்கு அருகில் உள்ள இரு ரெயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கிஷன்கஞ் ரெயில்நிலையத்தில் சரக்குகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கையாள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து வடக்கு பெங்கால், அஸ்ஸாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களுக்கு வர்த்தகர்கள் சரக்கு வேகன்களை புக்கிங் செய்யலாம்’’ என்றும் அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.