அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 12 பேர் இற ந்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் 242 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். இந்த விபரங்களை மாநில அரசின் சுகாதார துறை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளது.

அகமதாபாத் மற்றும் வதோதரா நகரில் 4 பேரும், அகமதாபாத் மாவட்டம் மேக்சனா, காந்திநகர் நகரப் ப குதி மற்றும் படான் மாவட்டத்தில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் 2 ஆயிரத்து 500 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 959 பேரு க்கு நோய் குணமடைந்துவிட்டது. ஆயிரத்து 299 பேர் தொடர்ந்து தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். 242 பேர் இறந்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு குஜராத் முதல்வர் விஜய் ரூபனி சூரத், ராஜ்கோட், வதோதரா, அகமதாபாத் ஆகுய மருத்தவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு பன்றி காய்ச்சல் நிலை குறித்து கேட்டறி ந்தார்.

ஆய்வின் போது முதல்வர் கூறுகையில்,‘‘பன்றி காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க சிறப்பு நிபுணர் குழுவை அனுப்பி வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.