ஜார்கண்ட்:

ருத்துவமனை நிர்வாகம்  ஆம்புலன்ஸ் தரமறுத்ததால் மூன்று வயது பெண் குழந்தை தாயின் மடியிலேயே பலியானது. இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கும்லா பகுதியை நேர்ந்த பெண் ஒருவர் தனது உடல்நிலை சரியில்லாத குழந்தையை அப்பகுதியில் உள்ள சர்தார் மருத்துவமனைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக  கொண்டு வந்தார்.

ஆரம்பக்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம், குழந்தையை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியது.  இதனால் செய்வதறியாத அந்த பெண், தனது ஊர் 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால்,   மருத்துவமனை நிர்வாகத்திடம் உடல்நலமின்றி உள்ள குழந்தையை கொண்டு செல்ல ஆம்புலன்சு கொடுத்து உதவும்படி கேட்டார்.

ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், அவரை வெளியேற்று வதிலேயே குறியாக இருந்தது.

இதையடுத்து, தனது உடல்நலமில்லாத குழந்தையுடன் நடந்தே தனது ஊருக்கு புறப்பட்டார்.

கடும் வெயில் காரணமாக, தாயின் கையில் இருந்த  அந்த குழந்தை அழ ஆரம்பித்தது. வசதியின்மை காரணமாக அந்த குழந்தைக்கு ஏதும் கொடுக்க முடியாத நிலையில், அந்த பிஞ்சு குழந்தை தாயின் கைகளிலேயே மரணத்தை தழுவியது.

தாயின் கையிலே குழந்தை பலியான சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பாரதியஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.