விழுப்புரம் – எழும்பூர் ரயில் தடத்தில் சேவைகள் பகுதி ரத்து

Must read

சென்னை

விழுப்புரம் – எழுப்பூர் ரயில் தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சேவைகளில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வே நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில்,

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், வருகிற 17  மற்றும் 24ம் தேதிகளில்  சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.55 மணிக்குப் புறப்பட்டு நாகர்கோவில் (06063)  செல்லும் சிறப்பு ரயில், எழும்பூர்- தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இரவு 7.25 மணிக்குப் புறப்படும். 

அதேபோல் வருகிற 18 மற்றும் 25ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் (06064) வந்து சேரும் சிறப்பு ரயில், தாம்பரம் – எழும்பூர்  இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

Latest article