சென்னை

சென்னை ஐ சி எஃப் மூலம் உருவாக்கப்பட்டு வரும் ரெயில்18 வடிவமைப்பு மாற்றப்பட்டதால் காரணமாக முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் அதிக வேக ரெயிலான ரெயில்18 சென்னை இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. மேக் இன் இந்தியா என்னும் மோடியின் திட்டத்தின் கீழ் உருவான இந்த ரெயில் வந்தே பாரத் என பெயர் சூட்டப்பட்டு டில்லிக்கும் வாரணாசிக்கும் இடையில் ஓடத் தொடங்கியது. இந்த சேவையை பிரதம்ர் மோடி இந்த வருடம் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த ரெயில் சேவை இதுவரை எவ்வித குறையுமின்றி செல்கின்றது.

இந்நிலையில் இந்த ரெயில் அமைப்புக்கான கொள்முதலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய புலனாய்வுத் துறைக்கு புகார்கள் வந்தன. அதை ஒட்டி சென்னை ஐசிஎஃப் அலுவலகத்தில் நடந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ரெயிலின் வடிவமைப்பில் கொடுக்கப்பட்டிருந்த பலவும் மாற்றப்பட்டுள்ளது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

டிரான்ஸ்ஃபார்மர் உள்ளிட்ட பல பாகங்கள் தற்போது கிடைப்பவைகளை ஒட்டி மாற்ற்ப்பட்டு மற்ற பாகங்களும் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  எனவே அதை ஒட்டி இந்த டிரான்ஸ்ஃபார்மருக்கு ஏற்ப பல உபகரணங்கள் மாற்றப்பட்டுள்ளன.  இதனால் முதலில் உள்ள வடிவமைப்புக்கும் தற்போதைய வடிவமைப்புக்கும் மாறுதல்கள் உண்டாகி இருக்கின்றன.  எனவே இந்த ரெயில் 18 உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ரெயில் 18 முதல் முறை வடிவமைக்கப்பட்டதை போல் அனைத்து மாற்றங்களையும் நீக்கி மீண்டும்  வடிவமைக்கப்பட  உள்ளது. அதன்படி தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு பழைய வடிவமைப்புக்கு ஏற்ப மீண்டும் அனைத்து ரெயில்களும் உருவாக்க திட்டமிடபட்டுள்ளன. இதனால் இந்த ரெயில் ஏற்கனவே அறிவித்தபடி வெளி வராதுஎன கூறப்படுகிறது.