டில்லி:

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு மக்களவையில் 2வது வரிசையில் இடம் ஒதுக்குமாறு சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். மேலும்,  காங்கிரஸ் உறுப்பினரும் மூத்த தலைவருமான  ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிஏசி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முன்வரிசையில் அமர  சோனியா காந்தி முன்மொழிந்துள்ளார்.

கடந்த முறை, காங்கிரஸ் கட்சியில் இருந்து சோனியாவும், மல்லிகார்ஜுன கார்கேவும் முதல் வரிசையில் அமர்ந்தனர். ராகுலுக்கு இரண்டாம் வரிசை ஒதுக்கப்பட்டது. இம்முறை, ராகுல் தன் தாயுடன் முன் வரிசையில் அமர்ந்துள்ளார்.

சபையின் தொடக்கத்தில் முதல் வரிசையில் எதிர்க்கட்சி பெஞ்சுகளில் சோனியா காந்திக்கு அடுத்த இடத்தை ராகுல் காந்தி ஆக்கிரமித்துள்ள போதிலும், சபாநாயகர்  அறிவித்ததுடன் அவர் இரண்டாவது வரிசைக்கு திரும்ப முடியும்.  எதிர்க்கட்சி பெஞ்சுகளின் முதல் வரிசையில் காங்கிரசுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான திமுகவின் டி.ஆர்.பாலு முன் வரிசையில் சோனியா காந்தி மற்றும் சவுத்ரிக்கு அடுத்த மூன்றாவது இடத்தைப் பிடிப்பார் என்றும் மக்களவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், திரிணாமுல் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி  கட்சித் தலைவர்களுடன், எஸ்.பி. தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் என்.சி தலைவர் ஃபாரூக் அப்துல்லா ஆகியோர் முன்னாள் முதல்வர்களின் மூப்புத்தன்மையைக் கருத்தில் கொண்டு முன் வரிசை இடங்களைப் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த மக்களவையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த மூத்த தலைவர்கள் ஐந்து பேர், இந்த முறை அமைச்சரவையில் இடம் பெறாததால், முன் வரிசை தலைவர்கள், ‘லிஸ்ட்’டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.  மேலும், எம்.பி.,க்கள் இருக்கைகளிலும் இடமாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்வரிசையில் இருந்து வந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், விவாதங்களில் பங்கேற்கும் வகையில், அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

பாரம்பரியமாக, பிஏசி தலைவரின் பதவி பிரதான எதிர்க்கட்சிக்கு செல்லும். இதை  சபாநாயகர் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முறையான அறிவிப்பு வெளியாகும்.  முந்தைய மக்களவையில் அமைக்கப்பட்ட  மூன்று சபைக் குழுக்களின் தலைமை பதவிகள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தது. அதுபோல, தற்போதும், நிதி மற்றும் வெளிவிவகாரங்கள் தொடர்பான நிலைக்குழுக்களின் தலைமையையும் காங்கிரஸ் கேட்டுள்ளது.

இதில்,  வெளிவிவகாரங்கள் தொடர்பான ஹவுஸ் குழுவின் தலைவராக சஷி தரூரை காங்கிரஸ் கட்சி  முன்மொழிந்துள்ளது. அரசாங்கமும் சபாநாயகரும் மற்ற கட்சிகளின் கோரிக்கைகளைப் பொறுத்து இறுதி முடிவை எடுப்பார்கள்.

இது தவிர  நிலைக்குழு தலைவர்களின் பதவிகளை கைப்பற்ற பலர் போட்டியில் குதித்துள்ளனர். இதுவரை 23 பேர் அதற்காக மனு தாக்கல் செய்திருப்பதாகவும், இந்த மனுக்கள் திரும்பெறும் நாட்களுக்குள்  குறையவில்லை என்றால், தேர்தல்கள் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.