போக்குவரத்து துண்டிப்பு – பாம்பு பிடிப்போர் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…

Must read

சென்னை: சென்னையில் போக்குவரத்து துண்டிப்பு – பாம்பு பிடிப்போர் குறித்தும் 24மணி நேர கட்டுப்பாட்டு அறை குறித்தும் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கனமழையின் காரணமாக சென்னையின் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகிறது. பல பகுதிகளில் காடுகளில் வசித்து வந்த பாம்பு போன்ற ஊர்வல, வீடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் வீடுகளில் வசிக்க அஞ்சி வருகின்றனர். இந்த நிலையில், பாம்பு பிடிப்போர்களின் தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுரங்கப் பாதைகள் 16 மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 10.112021 இரவு முதல் தற்பொது வரை பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் அதிக அளவு மழை நீர் தேங்கி உள்ளது. இந்த சுரங்கபாதைகளில் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது மழை நீர் தேக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் மண்டலம் வார்டில் மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு 46 ல் உள்ள வியாசர்பாடி நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாதை மற்றும் வார்டு 55 ல் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை. இராயபுரம் மண்டலம் வார்டு 60 ல் உள்ள ஆர்பிஐ சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 136 ல் உள்ள துரைசாமி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 140 ல் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதை தியாகராயநகர் வார்டு 136 ஸ் உள்ள மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் கனமழையின் காரணமாக நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சுரங்கப் பாதைகளின் வழியே செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பருவ மழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 x 7 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. பொதுமக்கள் 044-25619204, 044 25619206, 044-25819207, 044-25619206, 044-25303870 ஆகிய தொலைபேசி.  எண்களுக்கும், 1913 என்ற உதவி எண் மற்றும் 9445477205, 9445025819, 9445025820, 9445025821 ஆகிய வாட்ஸ் ஆப் எண்ணிகளிலும் தொடர்பு கொண்டு மழைநீர் தேக்கம், விழுந்த மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற புகார்கள் குறித்தும், தங்களுக்கு தேவையான உதவிகள் குறித்தும் தெரிவிக்கலாம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, பாம்பு பிடிப்பவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக  பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், சில இடங்களில் தேங்கி உள்ள மழை நீர் மற்றும் சகதியான இடங்களுக்குள் பாம்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி, பாம்பு பிடிப்பவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

More articles

Latest article