டில்லி

நாளை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் செல்ல உள்ளார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. எனவே அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அவருக்கு 4 வது முறையாகச் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அவர் நாளை குஜராத்துக்குச் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி,

“விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை புறப்படுவார். அவரது பயணத்தின் போது பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேச உள்ளார்.  மேல் அவர் கட்சித் தொண்டர்களைச் சந்தித்துக் கலந்துரையாட உள்ளார் “

என்று தெரிவித்துள்ளது.

தனது குஜராத் பயணத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சைதா் வாசவாவையும் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.