500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த எட்டாம் தேதி திடீரென பிரதர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கையில் செல்லத்தக்க பணம் இன்றி மக்கள் தவிக்கிறார்கள்.
0
பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, புதிய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், வங்கிகளில் பெரும் கூட்டத்தால் திணறுகின்றன. பல மணி நேரம் வரிசையில் நின்று பணத்தை மாற்ற வேண்டிய சூழல். அதிலும் பல வங்கிகளில் புதிய நோட்டுக்கட்டுகள் போதிய அளவுக்கு அளிக்கப்படாததால், மக்கள் தவிக்கிறார்கள்.  ஏ.டி.எம்.களில் பெரும்பாலானவைகளில் இன்னமும் புது நோட்டுகள் நிரப்பப்படவில்லை.
ஆக காய்கறி, பால் வாங்குவதில் இருந்து அனைத்துமே மக்களுக்கு சிரமமாக இருக்கிறது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களும், டோல்கேட்டில் சுங்க வரி கட்ட முடியவில்லை. பழைய நோட்டை  கொடுத்தால் சுங்கச்சாவடியில் வாங்குவதில்லை. இதனால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில், நாட்டின் நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் மூன்று நாட்களுக்கு வரியை ரத்து செய்து அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
சோகத்திலும் ஒரு சுகமாக இந்த அறிவிப்பு வந்திருப்பதாக நெடுஞ்சாலை பயணிகள் தெரிவிக்கிறார்கள்.