டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் கணக்கைத் துவங்கிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு-வின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற மகளிர் 49 கி பிரிவுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு ஸ்நாட்ச் பிரிவில் 87 கிலோவும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிலோ என மொத்தம் 202 கிலோ எடை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இந்தப் போட்டியில் சீனாவின் ஜிஹூய் ஹவு புதிய சாதனையாக மொத்தம் 210 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.

இதனைத் தொடர்ந்து இன்று தாயகம் திரும்ப இருப்பதாக இந்திய வீராங்கனை மீராபாய் சானு தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஊக்க மருந்து பயன்படுத்தியதாக பரிசோதனை செய்யப்பட்ட சீன வீராங்கனை ஜிஹூய் ஹவு-வை டோக்கியோ-விலேயே தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன வீராங்கனை போதை மருந்து பயன்படுத்தியது உறுதிபத்தப்பட்டால் போட்டி விதிகளின் படி இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கப் பதக்கம் வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே இந்தப் போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.