டோக்கியோ ஒலிம்பிக்2020: அரையிறுதி போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வி

Must read

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை நடைபெற்ற ஹாக்கி போட்டியில், பெல்ஜியத்திடம் இந்திய அணி தோல்வுயுற்றது. 5-3 கணக்கில் பெல்கியம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

டோக்கியோவில் இன்று காலை நடைபெற்ற ஹாக்கி அரையிறுத்திப்போட்டி இந்திய – பெல்ஜியம் இடையே நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய முதலே ஆக்ரோசமாக நடைபெற்றது. போட்டி தொடங்கிய முதல் காலிறுதியில், 2-1 என இந்தியா லீட் எடுத்தது. போட்டியின் முதல் சில நிமிடங்களிலேயே கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை பயன்படுத்தி இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். அடுத்த சில நிமிடங்களில், இந்தியாவுக்கு இரண்டாவது கோலை அடித்தார் மந்தீப். இதனால், முதல் பாதியின் முடிவில் இந்தியாவுக்கு முன்னிலை கிடைத்தது.

போட்டியின் 17-வது நிமிடத்தில், பெல்ஜியம் அணிக்கு அடுத்தடுத்து கிடைத்த 3 பெனால்டி கார்னர்களையும் இந்திய அணி தடுத்தது. இதையடுத்து  அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா 2 – 5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் போராடி தோல்வியடைந்தது.

ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதவுள்ளது.

இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆஸ்திரேலியா – ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடையும் அணியுடன், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது.

More articles

Latest article