மோடி, அமித்ஷாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5 ஆம் தேதி விசாரணை

Must read

டில்லி

ரும் 5 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

 

டில்லி காவல்துறை ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்ததை எதிர்த்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கறிஞர் மனோகர் சர்மா நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.   உச்சநீதிமன்றத்தில் இந்த மனு கடந்த மாதம் 30 ஆம் தேதி தாக்ல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், ”டில்லி காவல்துறை ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டது கடந்த 2018 ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது.  அவ்வழக்கின் தீர்ப்பின்படி காவல்துறை ஆணையர்களை நியமிக்கும் போது அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணிக்காலம் இருக்க வேண்டும் என உள்ளது.

இந்நிலையில் எல்லை  பாதுகாப்புப் படை டிஜிபியாக இருந்த ராகேஷ் அஸ்தானாவை டில்லி காவல்துறை ஆணையராக ஓராண்டு மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.   இதன் மூலம் அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதால் இவர்கள் அரசியலமைப்பு பதவியைத் தொடர முடியுமா என உச்சநீதிமன்றம் தீர்ப்பளீக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணைஅயி வரும் 5 ஆம் தேதி நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

More articles

Latest article