தர்மசாலா

தர்மசாலாவில் நடைபெறும் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன 

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாச்சலப்பிரதேச கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கத்தில் நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது.

இதுவரை இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காள தேசம் அணிகளை அடுத்தடுத்து வெற்றி கொண்டு அருமையான நிலையில் உள்ளது. அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (265 ரன்கள்), விராட்கோலி (259 ரன்கள்), லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யரும், பந்து வீச்சில் பும்ரா (10 விக்கெட்) ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜூம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் டிவான் கான்வே (249 ரன்கள்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், வில் யங், பொறுப்பு கேப்டன் டாம் லாதமும், பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னெர் (11 விக்கெட்), மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்டும் அருமையாக விளையாடி வருகின்றனர்.

முதல் 4 ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்திக்காமல் வலுவான நிலையில் இருக்கும் இரு அணிகளும் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை ருசித்து அரைஇறுதியை நெருங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.

இந்த போட்டிக்கான உத்தேச வீரர்கள் பட்டியல் பின் வருமாறு

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா, சூர்ய குமார் யாதவ் அல்லது இஷான் கிஷன், ஷர்துல் தாக்குர் அல்லது  முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

நியூசிலாந்து:

டிவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் (கேப்டன்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.