கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

Must read

சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 689 பேரும் கோவையில் 1,420 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 10,448 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,88,746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 30,338 பேர் உயிர் இழந்து 22,44,073 பேர் குணம் அடைந்து தற்போது 1,14,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,27,283 பேர் பாதிக்கப்பட்டு 7,920 பேர் உயிர் இழந்து 5,12,832 பேர் குணம் அடைந்து தற்போது 6,531 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 1,420 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 1,123 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,08,253 பேர் பாதிக்கப்பட்டு 1,806 பேர் உயிர் இழந்து 1,92,051 பேர் குணம் அடைந்து தற்போது 14,396 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,52,722 பேர் பாதிக்கப்பட்டு 2,275 பேர் உயிர் இழந்து 1,47,278 பேர் குணம் அடைந்து தற்போது 3,169 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

 

 

More articles

Latest article