ன்னியாகுமரி

ன்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 

தி.மு.க. இளைஞர் அணி மாநிலச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக இன்று குமரி மாவட்டம் வருகிறார்.

அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டத்துக்கு வருகிறார்.  இன்று மாலை 4 மணி அளவில் குழித்துறையில் திறந்த வேனில் நின்றவாறு, நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு அவர் நாகர்கோவில் வேப்பமூடு பொன்னப்ப நாடார் திடலில் மாலை 5 மணி அளவில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்துப் பேசுகிறார். அதற்குப் பிறகு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை மாவட்டத்துக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.