இன்று மகாதீபம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது… வீடியோ

Must read

திருவண்ணாமலை: கார்த்திகை மாதத்தின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபம் இன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அண்ணாமலையார் வீற்றிருக்கும் திருவண்ணாமலையின் உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, இன்று காலை  திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

 கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலின் 10ம் நாள் விழாவான  இன்று அதிகாலை சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் அதிகாலை 3.20 மணிக்கு ஆலயத்தின் கருவறை முன்பு உள்ள பிரதோஷ நந்தி சிலை அருகில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா, என்று சொல்லி வழிபட்டனர்.

இதையடுத்து இன்று கோவிலில்  தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். பின்னர் , மாலை 6 மணியளவில் கோயில் தீப தரிசன மண்டபத்தின் முன்பாக ஆணும், பெண்ணும் சமம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அர்த்த நாரீஸ்வரர் காட்சியளிக்கும் நிகழ்வும் நடைபெறும். அதே நேரத்தில் 2,668 அடி அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. விளையாடுவர்.

More articles

Latest article