வார ராசிபலன்: 19.11.2021 முதல் 25.11.2021வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் பொறுப்புகளுடன் பதவி உயர்வும் கிடைக்க சான்ஸ் இருக்குதுங்க. சக நண்பருங்க ஹெல்ப் செய்வாங்க. தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி பணிகளில் கவனம் செலுத்துவாங்க. குலதெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடுவீங்க. அந்தத் திட்டம் நல்லபடியா நிறைவேறுங்க. பெண்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். இந்த வாரம் சனிக்கிழமை, உங்களுக்கு ஒரு குட் நியூஸ் வரப்போகுது. மனசை அதுக்கு ஹாப்பியா தயார் செய்துக்குங்க. யோகமான வாரம். மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை உயரும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணம் வருவது தடைபடாதுங‘க. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

ரிஷபம்

தீவிரமான முயற்சிகளுடன் சில செயல்களில் முன்னேற்றமான பலன்களை அடைவீங்க. உத்தியோகத்தில் கவனக்குறைவால், சில தொல்லைகளை சந்திப்பீங்க. தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை விரைவாகச் செய்வீங்க. குடும்பத்தில் பழைய கடன் தொல்லைகள் தலைகாட்டும். பண உதவிகள் தள்ளிப்போகலாம். இந்த வாரம் சனிக்கிழமை, வாழ்வில் முன்னேற்றம் தரக்கூடிய தகவல் வரும். ஃபேமிலியில் ஒற்றுமை பலப்படும். கேட்ட இடத்திலிருந்து ஹெல்ப் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். அத்தியாவசியப்பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் கடந்த சில வாரங்களா இருந்துக்கிட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த சின்ன சண்டையும் நீங்கும். பிள்ளைங்க எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும்.  உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை ஃபுல்லா நீங்கும்.

மிதுனம்

இத்தனை காலமாய்த் தளர்வடைந்திருந்த விஷயங்களில் மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சூப்பர் வெற்றி காண்பீங்க. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழில் செய்யறவங்களுக்கு, பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஓய்வின்றி உழைப்பீங்க. குடும்பம் சீராக நடைபெறும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. இந்த வாரம் வியாழக்கிழமை, உங்கள் வயதுக்கேற்றபடி தொழிலில் / கல்வியில்/ வாழ்வில்/ பிசினஸில்/ உத்யோகத்தில் சூப்பராக முன்னேற்றம் தரக்கூடிய விஷயம் ஒண்ணு நடக்கப்போகுதுங்க. ரெடியா இருங்க. வாய்ப்புகள் உங்க அட்ரஸைத் தேடிக்கிட்டு வரும். வருங்கால நலன் கருதிப் புது முயற்சி எடுப்பீங்க. சுப செலவுகளால் சேமிப்புகள் கரைஞ்சாலும் அது சந்தோஷம்தாங்க குடுக்கும். குடும்பத்தாரின் குறைகளைத் தீர்க்க முன்வருவீங்க. ரொம்ப நாளா சந்திக்காத ஃப்ரெண்டை சந்திப்பதால் மனசு நிறையும்.

கடகம்

வாரம் ஆரம்பிக்கும்பொழுதே வியக்க வைக்கும் தகவல் வந்து சேரும். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்ட தூரப்பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறை வேறும். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவு தீரும். பல நாட்களாய் இருந்துக்கிட்டிருந்த பயத்துக்கு ‘எண்ட்’ கார்ட் போட்ருவாரு கடவுள். எதிர்பாராத செலவுகள் அதிகமாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள், ஆவணங்களை கவனமாக கையாளுங்க. தொழில் செய்யறவங்க, நவீனக் கருவிகளின் துணையோடு பணிகளை விரைந்து முடிப்பாங்க. குடும்பத்தில் இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் உங்க முயற்சியால் முடிவுக்கு வரும். ஆடம்பரமான செலவுகளைக் குறைச்சுக்குங்களேன்… ப்ளீஸ்… இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, உங்களுக்குச் சந்தோஷமும் பெருமிதமும் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீங்க. பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். பிறருக்காக பொறுப்புச்சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை அதிக முயற்சியோ சிரமமோ இல்லாமலேயே இயல்பாய் வந்து நிம்மதி தரும். பெரிய மனிதர்களின் நட்பால் பிராப்ளம் ஒன்றிலிருந்து ஹாப்பியா விடுபடுவீங்க. திட்டமிட்ட பணவரவுகள் சிறிது தாமதமாக வந்துசேரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடிச்ச இடமாற்றம் வரலாம். தொழில் செய்யறவங்களுக்கு, பொருளாதார உயர்வு ஏற்படும். அதே நேரம் வேலைப்பளு அதிகரிக்கும். இட்ஸ் ஓகே தானே? குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, எதிர்பாராக்காத நன்மையும் பணவரவும் வந்து சந்தோஷத்தைக் களைகட்டச் செய்யும். பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.  மற்றவர்களுக்கு உதவ முன்வருவீங்க. வாழ்க்கைத் துணை மூலம் லாபம்  கிடைக்கும். மனதில் இருந்த ஸ்மால் சைஸ் குழப்பங்கள் நீங்கும்.

கன்னி

வேலைகளில் சிறுசிறு தடைகள் இருந்தாலும் அதையெல்லாம் துச்சமாய்த் தூக்கிப்போட்டுட்டு, முறியடித்து முன்னேறுவீங்க. உயரதிகாரிகளின் ஆதரவும், சலுகைகளும் கிடைக்கும். கவர்ன்மென்ட் ஹெல்ப் உண்டுங்க.  தொழில் செய்பவருக்கு அதிக ஆதாயத்துடன் புதிய வேலை வந்து சேரலாம். பெண்களின் முயற்சியால் வீட்ல மகிழ்ச்சி பொங்கும். நண்பர்கள் ரொம்பவும் ஹெல்ப்ஃபுல்லா இருப்பாங்க. இந்த வாரம் புதன்கிழமை குட் நியூஸ் வரப்போகுதுங்க. தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிறருக்காக பொறுப்புச்சொல்லி வாங்கிக் கொடுத்த அமவுன்ட் வந்து சேரும். பெரிய மனிதர்களின் நட்பால் பிராப்ளம்ஸ்லிருந்து விடுபடுவீங்க. தொழில் வியாபாரத்தில் புதுசாய் ஒரு முயச்சியைப் பரீட்சார்த்தமாய் செய்ய நினைச்சால் அது இப்போ நல்ல பலன் தருமுங்க. எதிர்பார்த்த பேங்க் அல்லது தனியார் லோன் கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும்.

துலாம்

உத்தியோகத்தில் சிலருக்குப் பொறுப்புங்க அதிகமாகலாம். தொழிலில் முன்னேற்றமான போக்கு காணப்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் சமாளித்து விடுவீங்க. உறவினர்கள் இல்ல நிகழ்வுகளில் பெண்கள் பங்கேற்பாங்க. இந்த வாரம் திங்கட்கிழமை, மாலையில் வரும் செய்தி உங்களைச் சந்தோஷத்தில் ஆழ்த்தும். உடன்பிறப்புகளின் உதவிகள் கிடைத்து மகிழ்வீங்க. மத்தவங்க விமர்சனங்களைத் தூக்கி டிராஷ் பின்- னில் போடுங்க. வருமானம் வரும். சின்னச்சின்னச் செலவுங்க காத்திருக்கும். மேரேஜ் முயற்சி கைகூடும். குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்தத்தில் விட்டுச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவாங்க. கணவன், மனைவிக்கிடையில்  சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீங்க. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 19 முதல் நவம்பர் 21 வரை.

விருச்சிகம்

குடும்பம் சீராக நடந்துக்கிட்டிருக்கும். சிறுசிறு பிராப்ளம்ஸ் காணப்பட்டாலும், பெரிய பாதிப்புகள் வராது. சுப காாிய பேச்சுகள் முடிவாகும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, உங்களை உற்சாக அருவில் மூழ்கடிக்கப்போகும் விஷயம் நடக்குமுங்க. நட்பால் ஷ்யூராய் நன்மை கிட்டும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் சூப்பரா இருக்கும். தொழில் ரீதியாக எடுத்த கூட்டு முயற்சி வெற்றி பெறும். ஒவ்வாத உணவுகளைச் சாப்பிட்டதால் லாஸ்ட் வீக் ஏற்பட்ட தொல்லை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  சற்று கவனமாகப் பணிகளை கவனிப்பது நல்லது. சில காரியங்களில் சிறப்பான வெற்றியும், சிலவற்றில் சின்னஞ்சிறு தடையும் வரக்கூடும். மறைமுகமாக உங்களை குறை சொல்லிக்கிட்டிருந்தவங்க தங்கள் தவறை உணர்வாங்க. நினைச்ச விஷயம் ஒண்ணு நல்லபடியா முடிஞ்சு மனமகிழ்ச்சி ஏற்படும். நிம்மதியா ஃபீல் பண்ணுவீங்க. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க.

 சந்திராஷ்டமம் : நவம்பர் 21 முதல் நவம்பர் 24 வரை.

தனுசு

முக்கியமான விஷயங்களில் நீங்க எதிர்பார்த்த சக்ஸஸ் வருங்க. பண வரவு கொஞ்சம் டிலே ஆனாலும் வரவேண்டிய வேண்டிய நேரத்துக்கு, சரியா வந்துடும். உத்தியோகத்தில் அவசரமாகச் செய்த பணியில் ஏற்பட்ட சின்னக் குழப்பத்தை நிவர்த்தி செய்வீங்க. தொழிலில்/ பிசினஸில்/ பணியில் நல்ல அனுபவம் பெற்ற வழிகாட்டி ஒருத்தர் உங்களுக்குக்  கெடைச்சு வழிநடத்துவார்.  குடும்பத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். லேடீஸுக்கு உபரி வருமானம் கெடைக்கும். இந்த வாரம் புதன் கிழமை, நீங்க சந்திக்கப்போற ஒரு நபரால் வாழ்வில் சந்தோஷமான திருப்பம் வரும். எதிரிகள் உதிரியாகும் நாள். வாங்கல்-கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு. வியாபார விருத்திக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ரொம்ப நாளா உடம்பை வருத்திக்கிட்டிருந்த பிரச்னைங்க.. குறிப்பா ஸ்கின் பிராப்ளம்ஸ் முடிவுக்கு வந்து நிம்மதி தரும். சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 24 முதல் நவம்பர் 26 வரை.

மகரம்

செலவினங்களை திட்டமிட வேண்டியது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள், கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தொழில் செய்யறவங்க, நவீனக் கருவிங்களை யூஸ் செய்து, பணிகளை விரைந்து முடிப்பீங்க. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைகாட்டினாலும், பாதிப்பு இருக்காது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, பெருமையும் மகிழ்ச்சியும் தரக்கூடிய சம்பவம் ஒன்று நடைபெறும்.  உத்தியோக முயற்சி கைகூடும் நாள். நாணயப்பாதிப்புகள் அகலும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீங்க. நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். விவாகப் பேச்சுகள் முடிவடையும். உங்களுடைய  பல கால விருப்பம் ஒண்ணு நிறைவேறுங்க. மத்தவங்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை.  எதிர்பாலினத்தவரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.

கும்பம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள், வேலைப் பளுவினால் தொல்லைப்பட நேரலாம். அவசியமான வேலை ஒன்றை அவசரமாகச் செய்வீங்க. தொழிலில் முக்கிய பணியை நிறைவேற்ற அலைச்சலை சந்திப்பீங்க. ஆதாயம் தள்ளிப்போகும். குடும்பத்தில் கடன் பிரச்சினையால் தொல்லை வரலாம். பெண்களுக்கு சுபச் செய்தி வந்துசேரும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, நீங்க மட்டுமில்லாம உங்க குடும்பத்தையே சந்தோஷத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயம் ஒண்ணு வீட்டைத் தேடி வரப்போகுதுங்க. நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம். யாருக்கும் வாக்குறுதியெல்லாம் குடுத்துடாதீங்க . ஒருவகையில் செலவு இருந்தாலும் மற்றொரு வழியில் சேமிப்பும் வருமானம் இருக்கும் என்பதால் டோன்ட் ஒர்ரி. தொழிலில் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோட இருங்கப்பா. அப்பிடி இருந்துட்டா உங்களை ஒரு பிரச்னையும் அண்டாது.

மீனம்

தேவையற்ற வார்த்தைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் வந்துசேரும். தொழில் செய்யறவங்களுக்கு, புதிய வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். வருவாய் போதுமானதாக இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும். சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்வீங்க. இந்த வாரம் வியாழக்கிழமை, உங்களுக்கு ஹாப்பி நியூஸ் வந்து உற்சாகப்படுத்தும். தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். விலகிப் போனவங்க வெள்ளைக் கொடி காட்டுவதுபோல் விரும்பி வந்திணையும் வாய்ப்பு உண்டு. சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்புடன் முடிவடையும். தந்தை வழியில் தனலாபம் உண்டு. வீண் பழி ஏற்படுத்தக்கூடிய எந்த விஷயத்தையும் கண்டிப்பா செய்யவே செய்யாதீங்க. ஃபாரின்ல இருக்கக்கூடிய உங்க ஸன் அல்லது டாட்டர் குடும்பத்திலிருந்து குட் நியூஸ் வந்து உங்களை ஹாப்பியாக்கிடும்.

More articles

Latest article