இன்று 24வது நாள்: போராடும் பட்டாசு தொழிலாளர்கள் இன்று ரெயில் மறியல்

Must read

சென்னை,

சுற்றுச்சூழலை காரணம்காட்டி, பட்டாசு தொழிலுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல  வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சுற்று சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டும், பட்டாசு வேலை செய்யும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அவர்களின் போராட்டம் இன்று 24வது நாளாக தொடர்கிறது. பட்டாசு தொழில் முடக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்து வரும் அவர்களின் குரலை மத்திய மாநில அரசுகள் செவிசாய்த்து கேட்க முன்வரவில்லை.

இதன்காரணமாக இன்று ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கையிலெடுத்தனர். இதன் காரணமாக காவல்துறையினருக்கும், பட்டாசு தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து ரெயிலை மறிக்க சென்றாக 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதும் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து பட்டாசு தொழிலையும், அதை நம்பி வாழும் தொழிலார்களின் குடும்பங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்று சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து பட்டாச தொழில் முற்றிலும் விலக்க அளிக்க கோரியும், பட்டாசு தொழிலையும், பட்டாசு தொழிலாளர்களையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலைகள் மூடி எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதை நம்பி வாழும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழந்து, பசி பட்டினியோடு போராடி வருகின்றனர்.

ஆனால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து செவிமடுக்க மத்திய மாநில அரசுகள் தயாராக இல்லாத நிலையில், இன்று ரெயிலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

More articles

Latest article