புதுச்சேரி

ன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 

இன்று புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் தொடர் கூடுகிறது. தொடரில் அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது.

எனவே இன்று புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, இன்று காலை 9.30 மணியளவில் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அதாவது இன்று 4 மாதத்திற்கு மட்டுமே ஆன இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிய வந்துள்ளது.