சென்னை

ன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதில்,” தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இன்று முதல் அதன் தொடர்ச்சியாக வரும் 16 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிகக் கனமழையும் ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும் மற்ற வடமாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரை இன்று மழை பெய்யக் கூடும்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று நள்ளிரவு உருவாகும் என்று கடந்த 10 ஆம் தேதி கூறப்பட்டிருந்தது. நாளை அது அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.