சென்னை

சென்னை கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்குகளில் கட்டிட கழிவுகளை மறு சுழற்சி செய்து மணல்,, ஜல்லி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்து வரும் குப்பைகளால் நகரம் பாழாகி வருகிறது.  இதையொட்டி சென்னை மாநகராட்சி குப்பைகளை மறு சுழற்சி செய்து உரம் தயாரிப்பு உள்ளிட்ட பணிஅக்ளை செய்து வருகிறது.  இந்த பணிகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்குகளில் மலை போல் குவிந்துள்ள குப்பைகளில் நடைபெற்று வருகிறது.

இங்குள்ள குப்பைகளில் உள்ள மரக் கழிவுகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சென்னையில் பல இடங்களில் சாலையோரம் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.  அவற்றை மாஸ் கிளீனிங் என்னும் திட்டத்தின் கீழ் அகற்றப்பட்டு இந்த கிடங்குகளுக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

இவற்றை ராட்சத இயந்திரங்கள் மூலம் பொடியாக்கி அவற்றில் இருந்து,20, 12,6 என்னும் அளவுகளில் ஜல்லிகள் மற்றும் இரு விதமான மணல்கள் தயாரிக்கப்படுகின்றன.   நேற்று அதன் சோதனை திட்டத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.  அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட  அதிகாரிகள் உடன்  இருந்துள்ளனர்.