ர்மபுரி

ன்று மாலை தர்மபுரியில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று  மாலை 6.00 மணிக்குத் தர்மபுரி அருகே தாடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. மைதானத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் ஆ.மணி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.