வேலூர்

க்களுடன் ஸ்டாலின் என்னும் செயலியை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இன்று வேலூரில் தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற உள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் இந்த விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியைத் தொடங்கி வைக்கிறார்.

தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மற்றும் ஒவ்வொரு தொகுதியைப் பற்றிய விரிவான தகவல்கள், அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் இந்த செயலியில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  செயலியின் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலினின் கள செயல்பாடுகளை\ அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயில் ரெயில் மூலம் வேலூர் மாவட்டம் காட்பாடிக்குச் சென்றடைந்தார். அவர் இன்று மேல்மொனவூரில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைக்க உள்ளார்.

முதல்வர் வருகையையொட்டி வேலூர் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளனர்..  இந்த பகுதிகளில் இன்று டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.