சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்…

Must read

சென்னை: சென்னையில் பராமரிப்பு பணிக்காக இன்று சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடையை தமிழ்நாடு  மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரவாயல் பகுதி: எம்.எம்.டி.ஏ காலனி, கந்தசாமி நகர், ருக்மணி நகர், சமயபுரம் மெயின் ரோடு, ஓம் சக்தி நகர் போரூர் கார்டன் பேஸ் -1, செட்டியார் அகரம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

திருவொற்றியூர் பகுதி: டி.எச்.ரோடு, பெரியார் நகர், நேதாஜி நகர் 1 முதல் 5 தெரு, அஞ்சுகம் நகர், சக்திபுரம், ராஜீவ்காந்தி நகர், காந்தி நகர், விம்கோ நகர், திருவொற்றியூர் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சோத்துப்பெரும்பேடு பகுதி: குமரன் நகர், நல்லூர், சோழாவரம் அம்பேத்நகர், சோழவரம் பஜார் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article